அறிவகம்


ஆண்கள் அறிவகம் - தேனி

ஆண்களுக்கான அறிவகம் தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டியில் இயங்கி வருகிறது.

மனமுவந்து புதிதாக இஸ்லாத்தை ஏற்று கொண்டவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை கடைமைகளையும், ஒழுக்க மாண்புகளையும் கற்றுத் தரும் கலாசாலேயே அறிவகம். இங்கு பயிலும் மாணவர்களுக்கு உணவு, மருத்துவம், கத்னா உட்பட அனைத்துச் செலவுகளும் இலவசமாக அறிவகத்திலிருத்தே செய்து தரப்படுகிறது.


தாவா இஸ்லாமிய அழைப்பு பணி...
இஸ்லாத்தை பிற சமுதாய மக்களுக்கு அறிமுகப்படுத்தும் அழைப்பு பணியை நமது டிரஸ்டின் வாயிலாக கடந்த 19 வருடங்களுக்கும் மேலாக நாம் செய்து வருகின்றோம். கிராமங்கள் முதல் நகரங்கள் வரை என அனைத்து பகுதிகளிலும் நமது அழைப்பு பணிகள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்...



பெண்கள் அறிவகம் - ஏர்வாடி 

பெண்களுக்கான அறிவகம் நெல்லை மாவட்டம் ஏர்வாடில் இயங்கி வருகிறது.

   மனமுவந்து புதிதாக இஸ்லாத்தை தழுவும் பெண்களுக்கு  இஸ்லாத்தின் அடிப்படை கமைகளும், ஒழுக்க மாண்புகளும்இங்கு கற்றுத் தரப்படுகிறது. உணவு, மருத்துவ செலவு, அவர்களுடைய குழந்தைகளின் பராமரிப்புச்  செலவு, உலகக் கல்வி மற்றும் மார்க்கக் கல்விச் செலவு உட்பட அனைத்துச் செலவுகளும் பெண்கள் அறிவகத்திலிருத்தே செய்து தரப்படுகிறது.

  கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் வாழ்விழந்த பெண்களின் வாழ்வில் ஒளியேற்றும் அகமாக பெண்கள் காப்பகம் அறிவகத்தின்  ஒரு பகுதியில் செயல்பட்டு வருகின்றது. காப்பகத்திற்கான கட்டிடம் கட்டும் பணி நிதிப்பற்றாக்குறையின் காரணமாக தடைப்பட்டுள்ளது. ஆனால் கட்டிடம் கட்டும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.