25 Jul 2012
பரேலி:கலவரம் நிகழ்ந்த பகுதியான பரேலி மற்றும் அண்மைமாவட்டமான அவோலாவிலும் தொடர்ச்சியாக 2-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. கலவரம் தொடர்பாக 75 பேர் கைது செய்யப்பட்டனர்.
பரேலியைச் சார்ந்த 35 பேரும், அவோலாவைச் சார்ந்த 40 பேரும் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் தினங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் டி.ஜி.பி ஜக்மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
கலவரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாக ஜக்மோகன் யாதவ் கூறியுள்ளார். மதரீதியான சடங்குகளில் சத்தமாக செய்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. பரேலியில் ஹிந்து கன்வாரியாக்கள் முஸ்லிம்களின் ரமலான் நோன்பு திறக்கும் வேளையில் மஸ்ஜிதுக்கு அருகே பாட்டுப்பாடி சத்தம் போட்டதை தொடர்ந்து இரு தரப்பினரிடையே மோதல் உருவானது. இதில் கன்வாரியா வெறிக்கும்பல் முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார ஸ்தாபனங்களை தீக்கிரையாக்கியது. இம்ரான் என்ற அப்பாவி இளைஞர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.
கலவரம் அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் பரவியது. இதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளூர் போலீஸ், பி.எஸ்.எஃப் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.