Tuesday, 21 August 2012

அஸ்ஸாம் : முஸ்லிம்களை வங்கதேச "குடியேற்றக்காரர்கள்" என கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல்!

AUG 21, அஸ்ஸாம் கலவரத்தில் "போடோ" தீவிரவாதிகளால் கொடுந்தாக்குதலுக்கு ஆளாகி உயிர்களை இழந்து -உடமைகளையிழந்து நிர்கதியாக நிவாரண முகாம்களில், கால் வயிறு கஞ்சி குடித்து வருகின்றனர்,பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள்.
இதை கூட பொறுத்துக் கொள்ள முடியாத  போடோ தீவிரவாதிகளும், மதவாத பா.ஜ.க.வும், ஊடகங்களும் முஸ்லிம்களை வங்கதேச "குடியேற்றக்காரர்கள்" என தொடர்ந்து துஷ்பிரச்சாரம் செய்து வருவது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும். இது பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்வுக்கு தடையாக அமைந்துள்ளது.  முஸ்லிம்களின் வாழ்வை சீர்குலைக்க "முஸ்லிம்களை பாகிஸ்தானோடும் பங்கலாதேஷுடனும் தொடர்பு படுத்தும் பிரச்சாரம்" என்பது  பாசிச சக்திகள், ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தும்  ஆயுதம். பொய்யையே  திரும்ப திரும்ப கூறும் "கோயபல்ஸ்" யுக்தியை தான் பா.ஜ.க. பயன்படுத்தி வருகிறது. அதற்கு பின் பாட்டாக செயல்படுகிறது ஊடகத்துறை. வங்கதேச அகதிகள் குறித்து "நாடாளுமன்றத்திலேயே உள்துறை இணை அமைச்சரால்" முறையான- முழுமையான கணக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.  சில ஆயிரம் பேர் மட்டுமே இந்தியாவில்  தங்கியுள்ளதாகவும் அவர்களும் திருப்பி அனுப்பட்டு வருவதாகவும் பதில் அளிக்கப்பட்டு விட்ட நிலையில், போடோக்களும் மீடியாக்களும் அசாமில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் "அந்நியப்படுத்தும் விதமாக" வங்கதேச "குடியேற்றக்காரர்கள்" என்ற வார்த்தை பதத்தை தொடர்ந்து பயன் படுத்தி வருகின்றன. சட்டத்துக்கு புறம்பாக  போடோக்கள் வைத்துள்ள  ஆயுதங்களை கைப்பற்றுவது குறித்து இங்கு யாரும் வாய் திறப்பது இல்லை. வாழ்க ஜன நாயகம்!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.