Wednesday, 5 September 2012

சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து: 45 க்கும் மேற்ப்பட்டோர் பலி

சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து
சிவகாசி: சிவகாசி அருகே முதலிப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தீ விபத்தில்  46 பேர் பலியாகியுள்ளனர்.  மேலும் 35 பேர் உள்ளே சிக்கியுள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை மேலும்  அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.  அவர்களை மீட்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிவகாசியை அடுத்த முதலிப்பட்டி எனும் ஊரில் இயங்கி வரும் ஓம்சக்தி பயர் ஒர்க்ஸ்  நிறுவனத்தின் ஆலையிலேயே இன்று இந்த தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில்  உள்ள 45 அறைகளில் பட்டாசுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த அறைகள்  முழுவதுமே தீப்பிடித்து எரிகிறது.
தொடர்ந்து பட்டாசு மற்றும் பட்டாசு தயாரிப்பதற்கான வெடிமருந்துகள் வெடித்து சிதறி  வருவதால்  தீயணைப்பு வீரர்கள் உள்ளே நெருங்க முடியாமல் தவித்து வருவதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினரும் வருவாய்த் துறையினரும்,  ஆம்புலன்ஸ்களும் அந்த தொழிற்சாலை அருகே கூட செல்ல முடியவில்லை. அவ்வளவு சக்தியோடு  பெரும் சத்ததோடு வெடிப்புகள் நடந்தன. பட்டாசு ஆலையில் பணியாற்றும் ஊழியர்களின்
குடும்பத்தினரும் குழந்தைகளும் வெளியே நின்று கொண்டு தலையிலும் வயிற்றிலும்  அடித்துக் கொண்டு அழுதனர்.
50 பேர் மயக்கம்
மேலும் தீ விபத்தை வேடிக்கை பார்க்க வந்த சுமார் 50 பேர் மயங்கி விழுந்ததால் மேலும்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 20 பேர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர், சிவகாசி, சாத்தூரில் இருந்து வந்த ஏராளமான தீயணைப்பு வண்டிகள் தீயை  அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதுவரை 46 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் உள்ளே இருந்தவர்களில் எத்தனை  பேர் உயிர் தப்பினர் என்பது தெரியவில்லை. 50 பேர் வரை பலியாகிவிட்டதாக சில தகவல்கள்  தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.