தஞ்சை தெற்கு : அரசியல் கட்சிகளின் இலாபங்களுக்காக இந்தியா முழுவதும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத பழி சுமத்தபட்டு கைது செய்யப்படுவதும் அவர்களுக்கு ஜாமீன் கூட மறுக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகின்றது. அதோடு அவர்கள் மீது யு.ஏ.பி.ஏ (சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம்) போன்ற காட்டுமிரான்டித்தனமான சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.இப்படி கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களை விடுவிக்க கோரி சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய்!! என்ற முழக்கத்துடன் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் பிரச்சாரம் செய்து வருகிறது. இப்பிரச்சாரத்தில் துண்டு பிரசுரங்கள் வினியோகித்தல், கையேடுகள் வினியோகம், போஸ்டர் பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், தெரு முனைக்கூட்டங்கள் போன்ற வற்றை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு பட்டுக்கோட்டை பகுதியிலும் மற்றும் மதுக்கூர் பகுதியிலும் தெரு முனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பாப்புலார் ஃப்ரண்டின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அபு பக்கர் சித்திக் மற்றும் உறுப்பினர் ஷேக் அஜ்மல் உரையாற்றினார். இதில் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.