Tuesday, 18 September 2012

சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் மனித சங்கிலி போராட்டம்


சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் மனித சங்கிலி போராட்டம்



பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! எனும் முழக்கத்தோடு இந்தியா முழுவதும் தேசிய அளவிலான பிரச்சாரத்தை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தி வருகிறது. இப்பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று சரியாக 11 .00 மணிக்கு இந்தியா முழுவதும் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சென்னை மாவட்ட தலைவர் நாஜிம் அவர்கள் தலைமை தாங்கினார்.பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில துணை தலைவர் இஸ்மாயீல் , மாநில பொது செயலாளர் ஹாலித், ஆல் இந்தியா இமாம் கவுன்சிலின் மாநில தலைவர் மௌலவி. இபுராஹீம் உஸ்மானி அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் உட்பட மொத்தம் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.