Thursday, 11 October 2012

மதுபானக் கடைகளை “அடித்து நொறுக்கும் போராட்டம்”:எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி உரை:


மதுபானக் கடைகளை “அடித்து நொறுக்கும் போராட்டம்”:எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி உரை:

SDPI 09/10/2012 0
           தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. அதனடிப்படையில் நேற்று, (07-10-2012) சென்னையில் ஏழுகிணறு பகுதியில் வட சென்னை மாவட்ட தலைவர் எஸ். அமீர் ஹம்சா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தென் சென்னை மாவட்ட தலைவர் உசேன் வரவேற்றார். மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி, மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, மாநில செயற்குழு உறுப்பினர் ரத்தினம் அண்ணாச்சி சிறப்புரையாற்றினர்.
மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தனது உரையில்,
தமிழகத்தில் கந்து வட்டி லாட்டரி சீட்டு, ஆகியவற்றை தடை செய்த தமிழக அரசு மதுவை தடை செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். பெண்களின் திருமணத்திற்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடை மூலம் ஆயிரக்கணக்கான பெண்களின் தாலி அறுபடக் காரணமாக இருக்கிறது. தமிழகத்தில் நடைபெறும் அனைத்து குற்றங்களுக்கும் மூல காரணமாக இருக்கக்கூடிய மதுவினை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.
                              மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி, வருகின்ற அக்டோபர் 17 ல் தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் நடத்தவிருக்கிறோம். அதன் பிறகும் மதுவை தடைசெய்ய தமிழக அரசு தவறும் பட்சத்தில், அனைத்து கட்சிகளையும், பொது மக்களையும் ஒன்று திரட்டி மதுபானக் கடைகளை “அடித்து நொறுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.