பதிலுக்கு பதில் போலீஸ் நடவடிக்கை : சாகிப் மீது பயங்கரவாத வழக்கு!
OCT 5, ஹிந்துத்துவ தீவிரவாதிகள், வழக்குகளில் சிக்கும் போதெல்லாம், அந்த செய்திகளை மறைத்திடும் வகையில் "பதிலுக்கு பதில்" என்ற அடிப்படையில், உடனடியாக முஸ்லிம்களை கைது செய்து வீண் பழி சுமத்துவது, போலீசின் வாடிக்கையாகி விட்டது.நேற்று (04/10) ஹிந்துத்துவ தீவிரவாதிகள் புரோஹித், பெண் சாமியார் பிரக்கியா சிங் உள்ளிட்டவர்களுக்கு, உச்ச நீதிமன்றம் ஜாமீன் கொடுக்க மறுத்த செய்தி வெளிவந்த அதே நாளில், "பதில்" நடவடிக்கையாக, ஹைதராபாத்தில் கேபிள் டி.வி. கம்பெனியில் வேலை பார்த்து வந்த "தையப் ஜாபர்" (32) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு போலீஸ், ஹைதராபாத் சென்று இந்த கைது படலத்தை நடத்தியது. இது தவிர மகாராஷ்டிர போலீஸ், தன் பங்குக்கு சிமியின் முன்னாள் உறுப்பினர் என்று சொல்லி, சாகிப் நாச்சின், அவரது மகன் இஸ்மாயீல், சாகிபின் சகோதரர் மகன் ஆகிப் உள்ளிட்ட 4 முஸ்லிம்களை "Maharashtra Control of Organaised Crime Act" ( MCOCA -மகோகா) பயங்கரவாத சட்டத்தில் கைது செய்துள்ளது. இவர்கள் மீது "பீவண்டி" விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் மனோஜ் என்பவரை கொள்ள முயன்றதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் "தன்வீர் அப்துல் அஜீஸ்" என்பவரையும் கைது செய்துள்ளனர். கடந்த 2003ல் கோவிலை தாக்கியதாக வழக்கு போட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள சாகிப் மீது, 2012 ஆகஸ்ட் 3ந்தேதி, வக்கீல் ஒருவரை துப்பாக்கியால் சுட்டதாகவும் வழக்கு போடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.