பர்மா : முஸ்லிம்கள் தப்பிச்சென்ற படகு மூழ்கி 100 பேர் பலி!
NOV8, மேற்கு மியான்மரில் புத்த தீவிரவாத தாக்குதலால், இந்த ஒரு மாதத்தில் மட்டும், நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.அரசின் கணக்கின்படி 29,000 முஸ்லிம்கள் வீடுகளிழந்து முகாம்களில் உள்ளனர்.
முகாம்களில் உள்ள காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வந்துள்ள சர்வதேச மருத்துவர்களின் குழுவையும், புத்த தீவிரவாதிகள் விரட்டியடித்து வருகின்றனர்.
இந்நிலையில், பர்மா முஸ்லிம்களுக்கு அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சம் அடைவதை தவிர வேறு வழியில்லை.
எனவே, கூட்டம் கூட்டமாக, பர்மாவை விட்டு சிறு சிறு படகுகள் மூலம் தப்பித்து வருகின்றனர்.
இதற்கிடையில், நேற்று வங்கதேச கடற்படை தளபதி முஹம்மத் ஜாஹித் ரோந்து பணியை மேற்கொண்டிருந்த நேரத்தில், மலேசியாவை நோக்கி சென்றுக்கொண்டிருந்த படகு ஒன்று மூழ்குவதை கண்ட அவர், அதிலுள்ளவர்களை மீட்கும் படி உத்தரவிட்டார்.என்றாலும், 12 நபர்களை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது.
இந்த வாரத்தில், மட்டும், மியான்மர் முஸ்லிம்கள் வரும் படகு, கடலில் மூழ்கும் இரண்டாவது சம்பவம் இது, என்றார் தளபதி ஜாஹித்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.