Tuesday, 18 December 2012

முஸ்லிம்களை பொய்யாக தீவிரவாதியாக சித்தரித்த பொழுது முதல் பக்கத்தில் இட்ட பத்திரிக்கை உண்மையான குற்றவாளியான ஆர் எஸ் எஸ் தீவிரவாதி கைதை பெட்டி செய்தியாக மாற்றுவது ஏன்


முஸ்லிம்களை பொய்யாக தீவிரவாதியாக சித்தரித்த பொழுது முதல் பக்கத்தில் இட்ட பத்திரிக்கை உண்மையான குற்றவாளியான ஆர் எஸ் எஸ் தீவிரவாதி கைதை பெட்டி செய்தியாக மாற்றுவது ஏன்?



மக்கா மஸ்ஜித் மற்றும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடித்தவுடன் முஸ்லிம்கள்தான் காரணம் என முதல் பக்கத்தில் தலைப்பிட்ட அப்பாவி முஸ்லிம்களின் வாழ்க்கையை சீரழித்த பத்திரிக்கை இப்பொழுது ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகளை கைது செய்ததை மட்டும் பெட்டி செய்தியாக மாற்றுவது ஏன்?சகோதர பாசமா?மேலும் மக்கள் மனதில் இருந்து இந்த முத்திரையை உங்களால் அழிக்க முடியுமா?இதன் மூலம் எல்லா படங்களிலும் முஸ்லிம்களை தீவிரவாதியாக மாற்றுவதை உங்களால் மாற்ற முடியுமா?இன்று முஸ்லிம்களை மக்கள் தீவிரவாதியாக எண்ணுவதற்கு மூல காரணம் பத்திரிக்கை துறை,காரணம் எந்த இடத்தில குண்டு வெடித்தாலும் எந்த விசாரணையும் இன்றி மேலும் பக்கத்தில் இருந்து பார்ப்பது போல் அந்த தீவிரவாத இயக்கம் (லஸ்கர் இ தொய்பா,ஜெய்ஷ் இ முஹம்மத்,டெக்கான் முஜாஹித் ,சிமி,கூஜூ..ETC இன்னும் புதிது புதிதாக என்ன என்ன பெயர் இருக்கோ எல்லபெயர்களிலும் கடிதம் வந்தது என்று புருடா விடுவர் அந்த கடிதத்தை எழுதியவரே உளவு துறையை சேர்ந்தவர் இருப்பார் இதுவரை நடந்த குண்டு வெடிப்புகளில் முஸ்லிம்களை கைது செய்யும் பொழுது கொட்டெழுத்தில் வெளியிடும் பத்திரிக்கை அவர்கள் 15 நாட்களுக்கு பிறகு வெளியே வரும் பொழுது அந்த செய்தியை வெளியிடுவதில்லை.தயவு கூர்ந்து இனியாவது குண்டு வெடிப்பு நடந்தவுடன் விசாரித்து உண்மை குற்றவாளியை கண்டு பிடித்து இடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் இதன் மூலம் எத்தனை பேருடைய வாழ்க்கை சீரழிந்து நடு  ரோட்டில் நிற்பது என்று உங்களுக்கு தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை..




இப்பொழுது சம்ஜோதா எக்ஸ்பிரஸ் மற்றும் மக்கா மஸ்ஜிதிலும் குண்டு வைத்தவர்கள் பற்றி வருவோம் சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தீவிரவாதி ராஜேஷைத் தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.டெல்லி மற்றும் பாகிஸ்தானிலுள்ள லாகூர் இடையே இயக்கப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. அரியானா மாநிலம் பானிப்பட் அருகே பாகிஸ்தான் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்த வேளையில் இந்த அசம்பாவிதம் நடந்தது.குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட பயங்கர தீயில் கருகி ரயில் பயணிகள் 68 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் பலத்தக் காயமுற்றனர். இதில் பெண்களும் குழந்தைகளுமே அதிகம்.


இந்தக் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கியக் குற்றவாளியான ராஜேஷ் சவுதாரி என்ற தீவிரவாதியை மத்திய பிரதேசத்திலுள்ள உஜ்ஜயினில் தேசியப் புலனாய்வு அமைப்பினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த ராஜேஷ் சவுதாரி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய்ச் சன்மானம் வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தனது தலைக்கு பரிசு அறிவித்து போலீஸ் தேடிவருவதை அறிந்த "ராஜேந்தர் சௌத்ரி" தனது பெயரை "சமந்தர் சிங்" என்று மாற்றிக்கொண்டான்.ராஜேந்தர் சௌத்ரி, நேற்று முன்தினம் (15/12) மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ள நாக்தா என்னுமிடத்தில் கைது செய்யப்பட்டான்.



முன்னதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுவாமி அசீமானந்தா, லோகேஷ் சர்மா, தேவேந்தர் சிங் ஆகிய மூவர் ஜெயிலில் உள்ள நிலையில், ராம்சந்தர் என்ற "ராம்ஜி" மற்றும் "சந்தீப் டாங்கே" ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.தற்போது, ராஜேந்தர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த அதே குழு தான், "மக்கா மசூதியிலும்" குண்டு வைத்ததாக கூறுகிறான்.2007 பிப்ரவரி 18,ல் சம்ஜோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்த இவர்கள், 2007 மே மாதம் 18 ந்தேதி, மக்கா மசூதியில் குண்டு வைத்துள்ளனர்.



மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணையில், ஹிந்துத்துவ இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அதில் ஈடுபட்ட தகவல்கள் வெளியானதன் பின்னர் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு விசாரணையும் திசைமாறி, அதில் ஈடுபட்டவர்களாக சுவாமி அசிமானந்தாவையும் மேலும் நான்கு ஹிந்துத்துவ தீவிரவாதிகளையும் அடையாளம் காட்டியது தேசிய புலனாய்வு அமைப்பு! 

இதனைத் தொடர்ந்து சுவாமி அசிமானந்தா வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்திற்குப் பிறகே, இந்தக் குண்டுவெடிப்புகளில் ஈடுபட்ட உண்மயான தீவிரவாதிகள் யாரென்பது வெளியாக ஆரம்பித்தது சம்ஜோதாவிலும், மக்கா மஸ்ஜிதிலும் குண்டு வைத்தவர்கள் ஒரே கும்பலை சார்ந்தவர்கள் தாம் என்ற தகவல் என்.ஐ.ஏவுக்கு கிடைத்துள்ளது. இரண்டு வழக்கிலுமே முதலில் முஸ்லிம்கள் மீதுதான் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் நடந்த விசாரணையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கு வெட்ட வெளிச்சமானது.


குறிப்பு :

மேலும் விசாரணை நடத்தினால் இதுவரை நடத்த எல்லா குண்டு வெடிப்புகளையும் நடத்தியவர்கள் ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகளாக இருப்பார்கள்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.