Tuesday, 1 January 2013

கம்பத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம்




தேனி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக தேசிய அளவில் " ஆரோக்கியமான மக்கள் ! வலிமையான தேசம் !! " என்ற முழக்கத்தோடு பொதுமக்களின் ஆரோக்கியம் கருதி பல்வேறு இலவச மருத்துவ முகாம்கள் , இரத்ததான முகாம்கள் , யோகா பயிற்சிகள் , பொது மருத்துவமனைகளை சுத்தம் செய்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது .

சமீபத்தில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் மக்கள் பரவலாக பாதிக்கப்பட்டுள்ளனர் . இதனை தடுக்கும் விதாமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது . தேனி மாவட்டத்தில் சின்னமனூர் , தேவதானப்பட்டி , பெரியகுளம் போன்ற பகுதிகளில் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக " தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு மற்றும் இருதய நோய் , சர்க்கரை நோய் இலவசமாக கண்டறியும் முகாம் " தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள சுங்கம் பள்ளிக்கூடத்தில் வைத்து 29.12.2012 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது . இம்முகாமில் இலவசமாக ECG , Sugar Test கண்டறியப்பட்டது மற்றும் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் பற்றிய கையேடு இலவசமாக வழங்கப்பட்டது . இம்முகாமின் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்தனர் .

இம்முகாமிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கம்பம் நகர தலைவர் சிக்கந்தர் ஜெய்லானி தலைமை தாங்கினார் . கம்பம் ஐந்து மாவட்ட விவசாய சங்க தலைவர் K.M.அப்பாஸ் , கம்பம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஹாஜி.Dr .செய்யது சுல்தான் இபுராஹீம் M.D ., , உத்தமபாளையம் வட்டாட்சியர் ஜவஹர்லால் பாண்டியன் , கம்பம் Ex.அரசு மருத்துவ அதிகாரி Dr.A.S.சுப்புராஜ் M.S., மற்றும் SDPI கட்சியின் தேனி மாவட்ட பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்தீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

கம்பம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் DR .செய்யது சுல்தான் இபுராஹீம் M.D .,


கம்பம் ஐந்து மாவட்ட விவசாய சங்க தலைவர் K.M.அப்பாஸ்


தேனி மாவட்டம் சுகாதார பணியின் துணை இயக்குனர் திருமதி.Dr.காஞ்சனா , உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திரு.V.கண்ணன் (RDO) மற்றும் கம்பம் வடக்கு காவல் நிலையம் ஆய்வாளர் திரு.P.உலகநாதன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தார்கள்.

கம்பம் வடக்கு காவல் நிலையம் ஆய்வாளர் திரு.P.உலகநாதன்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேனி மாவட்ட தலைவர் M.சாந்த் முஹம்மது விளக்கவுரை நிகழ்த்தினார். இம்முகாமில் Dr.A.அஹமது ஷேக் M.B.B.S., PGDCC மற்றும் Dr.S.ஜெஸிமா M.B.B.S., ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Dr.A.அஹமது ஷேக் M.B.B.S., PGDCC


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேனி மாவட்ட தலைவர் M.சாந்த் முஹம்மது





விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் பற்றிய கையேடு இலவசமாக வழங்கப்பட்ட போது


பத்திரிகை செய்தி  


நோட்டீஸ் 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.