Sunday, 3 February 2013

மதுக்கூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம்



தஞ்சாவூர் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம் 03.02.2013 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூரில் உள்ள பெரிய பள்ளி அருகில் வைத்து நடைபெற்றது.

இம்முகாமில் திரளான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் . அனைவருக்கும் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டது . மேலும் அனைவருக்கும் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்த இலவச ஏடும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.