: ! 9 Feb 2013 

புதுடெல்லி:சிறுமியைக் கடத்தி பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில் காங்கிரஸ் எம்.பி. மற்றும் அவரது குடும்பத்தினருக்கு டெல்லி விரைவு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
பிரதீப் ஷெராவத் என்பவர் மீது 2006ஆம் ஆண்டு 16 வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஷெராவத் மீது பலாத்கார வழக்கு தொடரப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி. மஹாபல் மிஸ்ரா, அவரது மனைவி ஊர்மிளா, மகள் கிரண், சகோதரர் ஹிரா மிஸ்ரா ஆகியோர் அந்த சிறுமியைக் கடத்தி, மஹாபல் மிஸ்ராவின் அலுவலகத்தில் அடைத்து வைத்து, ஷெராவத்தை திருமணம் செய்து கொள்ளும்படி மிரட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு டெல்லி, பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கான விரைவு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
இவ்வழக்கு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி, வீரேந்தர் பட் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மிஸ்ரா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், மிஸ்ராவும் அவரது குடும்பத்தினரும் நீதிமன்றத்தில் ஆஜராவதை தவிர்க்கவில்லை. அவர்கள் கும்பமேளாவில் கலந்து கொள்ள சென்று விட்டனர் என வாதிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வரும் 18ஆம் தேதி எம்.பி. மஹாபல் மிஸ்ரா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.