Sunday, 7 April 2013

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்:எஸ்.டி.பி.ஐ-பகுஜன் சமாஜ் கூட்டணியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!




பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியின் முதல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.டி.பி.ஐயின் மாநில தலைவர் அப்துல் மஜீத் 17 எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் 93 வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் கர்நாடகா மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ பெற்ற வெற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சட்டப்பேரவை தேர்தலிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக கர்நாடகா மாநில எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் கூறுகின்றனர். இதர வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலுக்கு தேசிய தலைவர் எ.ஸயீத் அங்கீகாரம் அளித்துள்ளார்.
எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயலாளர் டாக்டர்.மெஹ்பூப் ஆவாத் ஷெரீஃப், மாநில பொதுச் செயலாளர்களான அஃப்ஸர் பாஷா, அப்துல் ஹன்னான், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் பி.சி.முனியப்பா, பி.எஸ்.பி செய்தி தொடர்பாளர் டாக்டர் சி.எஸ்.துவாரகாநாத்,மாநில ஒருங்கிணைப்பாளர் என்.மகேஷ் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.