Tuesday 16 April 2013

பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்கான கருத்தரங்கம்!



Posted onMonday April 15, 2013
சென்னை: இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் மற்றும் அரசு படையினருக்கு இடையே நிகழ்ந்த இறுதிக்கட்டப்போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அநியாயமாக படுகொலைச் செய்யப்பட்டனர். மிகக் கொடிய மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்பட்ட சம்பவங்களை சேனல் 4 என்ற பிரிட்டன் தொலைக்காட்சி அலைவரிசை உலகிற்கு அம்பலப்படுத்தியது. இச்சம்பவம் உலக தமிழர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியது.

இந்நிலையில் சிங்களா புத்த பாசிச சக்திகள் தமிழர்களை அடுத்து தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை குறி வைக்க துவங்கியுள்ளனர். முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலம், கலாச்சாரம், வணிக நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் சிங்கள புத்த பேரினவாத குழுக்களால் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சிங்கள பேரினவாத பாசிசத்திற்கும், இதற்கு துணைபோகும் ராஜபக்ஷே அரசை கண்டித்தும் போராட்டங்களை நடத்தியது. இதனைத்தொடர்ந்து, ‘நேற்று தமிழர்கள்!இன்று முஸ்லிம்கள்!சிங்கள பாஸிசத்தை அனுமதியோம்! என்ற தலைப்பில் சென்னையில் வருகிற 18-ஆம் தேதி கருத்தரங்க ஒன்றை ஏற்பாடுச் செய்துள்ளது. இக்கருத்தரங்கிற்கு பாப்புலர் ஃப்ரண்டின் மாநிலப் பொதுச் செயலாளர் A.காலித் முஹம்மது தலைமை வகிக்கிறார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பாப்புலர் ஃப்ரண்டின் முன்னாள் தேசிய தலைவர் இ.எம்.அப்துல் ரஹ்மான், மாநில தலைவர் A.S.இஸ்மாயீல், இலங்கை தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் A.ஆசாத் ஸாலிஹ், இலங்கை தமிழர் தேசிய கூட்டமைப்பின் ஆலோசகரும், கொழும்பு பல்கலைக் கழக பேராசிரியருமான டாக்டர்.கந்தையா சர்வேஸ்வரன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழகப் பொதுச் செயலாளர் நெல்லை முபாரக், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் பேராசிரியர் அ.மார்க்ஸ், திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் A.அஹ்மது ஃபக்ருத்தீன் ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.