Monday, 3 September 2012

காஸ்மி:கைதாகி 6 மாதம்! – குற்றங்களை நிரூபிக்காத போலீஸ்!


காஸ்மி:கைதாகி 6 மாதம்! – குற்றங்களை நிரூபிக்காத போலீஸ்!

journalist Syed Ahmed Kazmi
புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக அதிகாரியின் காரில் குண்டுவைத்த வழக்கில் டெல்லி மூத்த பத்திரிகையாளர் செய்யத் அஹ்மத் முஹம்மத் காஸ்மி கைதாகி இம்மாதம் செப்.6-ஆம் தேதி 6 மாதங்கள் நிறைவுறுகின்றன. விசாரணை இன்னமும் முடிவடையாத நிலையில் சட்ட விரோத செயல்கள் தடைச்சட்டம்,  வெடிப்பொருள் சட்டம்,  இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகைக்கும், காஸ்மிக்கு எதிரான போலீசாரின் குற்றச்சாட்டுக்களும் இடையே மிகுந்த முரண்பாடுகள் காணப்படுகின்றன.
முரண்பாடு 1: காரில் குண்டு வைத்ததாக போலீஸ் கூறும் ஹுஷாங் அஃப்ஷர் ஈரானி,  காஸ்மியுடன் தொலைபேசியில் பேசினார் என்பது போலீசாரின் குற்றச்சாட்டு. ஆனால், தொலைபேசியில் ஈரானி,  காஸ்மியுடன் பேசியதற்கான எவ்வித ஆதாரமும் குற்றப்பத்திரிகையில் இல்லை.
முரண்பாடு 2: சிவப்பு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தாம் குண்டை வைத்தார் என்று ஒரேயொரு நேரடி சாட்சியின் கூற்று. ஆனால், போலீசார் கண்டுபிடித்ததோ கறுப்பு ஹீரோ ஹோண்டா ஃபேஷன் பைக் ஆகும்.
முரண்பாடு 3: குண்டு வைத்ததற்காக ரூ.21 லட்சம் ரூபாய், வெளிநாட்டில் இருந்து காஸ்மியின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று போலீசார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். ஆனால், இதுக்குறித்து குற்றப்பத்திரிகையில் எவ்வித தகவல்களும் இல்லை. கண்டுபிடித்ததாக கூறப்பட்ட தொகையோ 1250 டாலர் தொகையாகும். இத்தொகை தகவல்களை அளித்தற்கு கூலியாக அளிக்கப்பட்டது என்று போலீஸ் கூறினாலும், அதற்கான ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்ய முடியவில்லை.
முரண்பாடு 4: வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றதாக காஸ்மி குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் என போலீஸார் ஆதாரமாக கூறுகின்றனர். ஆனால், குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்திட காஸ்மி மறுத்தார் என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முரண்பாடு 5: 2009-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து காஸ்மியின் மனைவி 2 லட்சம் ரூபாய் அனுப்பியதாக போலீஸ் கூறுகிறது. ஆனால், போலீஸ் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் படி தாக்குதலைக் குறித்து காஸ்மிக்கு 2010-ஆம் ஆண்டுதான் தெரியும்.
முரண்பாடு 6: குண்டு வைத்தார் என்று போலீஸ் கூறும் அஃப்ஸர் ஈரானி,  தங்கினார் என்று கூறும் ஹோட்டல் அறை தொடர்பான போலீசாரின் வாதங்களிலும் சந்தேகங்கள் நிலவுகின்றன. தாக்குதலுக்கு முன்பு 13 தினங்கள் ஈரானி, இந்தியாவில் தங்கினார் என்று போலீஸ் கூறுகிறது. ஆனால், இந்நாட்களில் ஒருபோதும் அவர் காஸ்மியை சந்தித்ததாகவோ, பேசியதாகவோ ஆதாரங்கள் எதுவும் இல்லை.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.