ஸாதிக் ஜமால் போலி என்கவுண்டர் கொலை வழக்கு: துணை டி.எஸ்.பி கைது!
26 Sep 2012
அஹ்மதாபாத்:கடந்த 2003-ஆம் ஆண்டு ஸாதிக் ஜமால் மேத்தர் போலி என்கவுண்டரில் அநியாயமாக கொலைச் செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை துணை கண்காணிப்பாளரை சி.பி.ஐ கைது செய்துள்ளது.
வடக்கு குஜராத் மாநிலத்தின் மெஹ்ஸானா பகுதியில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய தருண் பரோட், சாதிக் ஜமால் மேத்தர் போலி என்கவுன்ட்டர் கொலை வழக்குத் தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். விசாரணைக்குப் பின் அவர் கைது செய்யப்பட்டார் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வழக்கில், செய்தியாளர் கேதன் திரோத்கர் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தருண் பரோட் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸாதிக் ஜமாலின் சகோதரர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த 2011-ஆம் ஆண்டு சி.பி.ஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.