Tuesday, 25 September 2012

ஹிந்துத்துவா பயங்கரவாதி பிரக்யாசிங்கின் ஜாமீன் மனு தள்ளுபடி!


ஹிந்துத்துவா பயங்கரவாதி பிரக்யாசிங்கின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Hindutuva terrorist Pragya`s bail plea rejected in Malegaon blast
மும்பை:மலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஹிந்துத்துவா பெண் பயங்கரவாதியான பிரக்யாசிங் தாக்கூரின் ஜாமீன் கோரும் மனுவை மஹராஷ்ட்ரா மாநில மோக்கா சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.
மஹாராஷ்டிரா மாநிலம் மாலேகான் நகரில் கடந்த 2008, செப்டம்பர் 29-ல் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கில் ஹிந்துத்துவா பெண் பயங்கரவாதியான சாமியாரினி சாத்வி பிரக்யா சிங் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“தனக்கு முதுகுத் தண்டுவட பாதிப்பு இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. எனவே ஜாமீன் தரவேண்டும்” என்று கோரி பிரக்யாசிங், மஹராஷ்ட்ரா சிறப்பு நீதிமன்றத்தில் கோரியிருந்த மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கில் தனக்குத் தொடர்பில்லை என்பதால் தனக்கு ஜாமீன் வழங்குவாறு அவர் மீண்டும் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை மஹராஷ்ட்ரா அமைப்புரீதியான குற்றத்தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நேற்று(செவ்வாய்க்கிழமை) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக பிரக்யாவின் வழக்குரைஞர் ராமேஸ்வர் கீதே தெரிவித்துள்ள்ளார்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.