Monday, 31 December 2012

மேலப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக டெங்கு தடுப்பு மற்றும் இரத்த பிரிவு கண்டறியும் முகாம் Posted onSunday December 30, 2012



நெல்லை : நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் லைப் லைன் இரத்த வங்கி, உலக தமிழ் மருத்துவ கழகம் மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை இணைந்து 23.12.2012 ஞாயிறு காலை 10மணி முதல் நண்பகல் 1மணி வரையிலும் நடத்திய டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, இரத்த பிரிவு கண்டறிதல் மற்றும் சர்வசுரக் குடிநீர் (நிலவேம்பு கசாயம்) இலவசமாக வழங்குதல் போன்ற மாபெரும் உடல்நல மருத்துவ முகாமை ஹாமீம்புரம் 1வது தெரு மாநகராட்சி ஆரம்ப பள்ளிகூடத்தில் வைத்து பாப்புலர் ப்ரண்ட் மாவட்ட தலைவர் அஹமது நபவி துவக்கி வைத்தார்.

பாப்புலர் ப்ரண்ட் மாவட்ட செயலாளர் அப்துல் கரீம் முகாமுடைய முக்கியத்துவம் குறித்து பேசினார், உலக தமிழ் மருத்துவ கழக தலைவர் மைக்கேல் ஜெயராஜ் சித்த தமிழ் மருத்துவம் பற்றி விளக்கம் அளித்தார், SDPI மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

திருநெல்வேலி சித்த மருத்துவ கல்லூரி டாக்டர்கள், பாப்புலர் ப்ரண்ட் நகர தலைவர் அப்துல் லதீப், நகர செயலாளர் ஜாபர் சாதிக், SDPI தொகுதி தலைவர் அப்துல் ஹமீது மற்றும் பாப்புலர் ப்ரண்ட் தொண்டர்கள் கலந்துக் கொண்டனர். இதில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 2000க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர்.

இம்முகாம் மூலம் 200க்கும் மேற்பட்ட மக்கள் தங்களின் இரத்த பிரிவுகளை  தெரிந்துக் கொண்டனர். மேலும் வந்தவர்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் மூலிகைப் பொடிகள் இலவசமாக கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டை சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஹாமீம்புரம் பகுதியில் செய்து இருந்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவை மக்கள் பெரிதும் பாராட்டினர். நிகழ்ச்சியின் முடிவாக பங்களா அப்பா பகுதியின் 5 தெருக்களிலும் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்தனர்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.