Friday, 25 January 2013

இஸ்லாத்திற்கு எதிரான விஸ்வரூபம் படத்தை மலேசியாவில் தடை செய்ய பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் கிம்மா கோரிக்கை !(மேலும் புகைப்படங்கள் இணைப்பு)


இஸ்லாத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரம் செய்வதை மேற்கத்திய நாடுகள்கொள்கையாக செய்து வருகின்றனர். இந்த வரிசையில் முகம்மது  நபி(ஸல்) அவர்களின்காட்ரூன் டென்மார்க் பத்திரிக்கையில் வெளியானது அதைத்தொடர்ந்து பல்வேறுபத்திரிகையில் கேலிச்சித்திரம் வெளிவந்தது. சமிபத்தில் வெளியான "INNOCENCET OF MUSLIMS" என்ற திரைப்படம் உலக மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பைஏற்படுத்தியது. அதை பின்பற்றி இந்தியாவிலும் பாலிவுட் படங்களில் இஸ்லாத்திற்குஎதிரான கருத்துக்கள் எடுக்கும் பாணி பின்பற்றப்படுகிறது. இதை அவ்வபோதுஇந்தியவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளும், மதச்சார்பற்ற
இயக்கங்களும் எதிர்த்து வருகின்றன. தமிழகத்தில் சமிபத்தில் திரைக்கு வந்த நடிகர்விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியது.அதன் பிறகு அப்படத்தின் தவறான கட்சிகள் நீக்க பட்டது.விஜய் மற்றும் படக்குழுவினர்அனைவரும் பகிரங்க மன்னிப்பு கேட்டனர்.
             கமலின் விஸ்வரூபம் படத்தில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாககிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் செயல்படும் முஸ்லிம் இயக்கங்களின்கூட்டமைப்பு இத்திரைப்படத்தை அவர்களுக்கு காட்டிய  பின்பே திரையிட வேண்டும்என்று அரசாங்கத்திற்கும்,கமலுக்கும் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் கடந்த21.01.2013 அன்று காண்பிக்கப்பட்டது.
 படத்தை பார்த்த அக்குழுவினர் படத்தில் நிறைய துவேசமான ,முஸ்லிம்களையும்இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் விதமான காட்சிகள் படத்தின் ஆரம்பம் முதல்இறுதிவரை  இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதனை அடுத்து இப்படத்தைவெளியிட தடை செய்யகோரி சென்னை கமிஷ்னர் மற்றும் தமிழக உள்துறைசெயலாளர்   ஆகியோரிடம்  மனு அளித்தனர்.அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுஇப்படத்தை  தமிழகத்தில் வெளியிட இரண்டு வாரத்திற்கு  தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது.இதனை முஸ்லிம்கள் நிரந்தர தடை செய்ய வேண்டும் என்றுகோரிக்கை வைத்துள்ளனர்.
உலகம் முழுவதும் இத்திரைப்படத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.இந்நிலையில்மலேசியாவில் இப்படம் இன்று திரையிடப்பட்டுள்ளது.இங்கும் இப்படத்தை திரையிடதடைவிதிக்க கோரி "கிம்மாவின் இளைஞர் அணித் தலைவர்"ஹாரிஸ் சிராஜுதீன்" தலைமையில் டான்வாங்கி போலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.புகாரில்இத்திரைப்படத்தை திரையிட உடனே  தடை செய்ய கோரியும் மற்றும்இத்திரைப்படத்தை இங்குள்ள முஸ்லிம் அமைப்புகளிடம் காண்பித்து அதிலுள்ளதவறான காட்சிகளை நீக்கி திரையிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 வெளியில் வந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த "கிம்மாவின் தேசிய இளைஞர்அணித்தலைவர் "ஹாரிஸ் சிராஜுதீன்" அவர்கள் கூறுகையில் இத்திரைப்படத்தின்மூலமாக மாற்று மத சஹோதரர்கள் இஸ்லாத்தை தவறாக புரிந்து கொள்வார்கள்மற்றும் இது இஸ்லாத்தையும் , முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும்மனதை புண்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது ,எனவே இதில் உடனடியாகஉள்துறை அமைச்சகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறினார்.இந்நிகழ்வின் போது கிம்மாவின் தேசிய துணை தலைவர் .முகம்மது மோஃபின்,தேசிய பொது செயலாளர் "அமீர் ஹம்சா" மற்றும் பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியாவின்செயல்வீரர்களும் கிம்மாவின் இளைஞர் அணி செயல்வீரர்களும் உடனிருந்தனர்.
2



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.