
ஆதிலாபாத்:ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா, முஸ்லிம்கள் மற்றும் மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன்(எம்.ஐ.எம்) தலைவர் அக்பருத்தீன் உவைஸி ஆகியோருக்கு எதிராக வகுப்பு வெறியூட்டும் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஜனவரி 22-ஆம் தேதி மஹராஷ்ட்ரா மாநிலம் தோக்கார் நகரில் பிரவீன் தொகாடியா வகுப்பு வெறியை தூண்டும் உரை நிகழ்த்தப்பட்டது. இதன் காட்சிகள் ஆன்லைனில் காணக்கிடைக்கிறது. உரை நிகழ்த்துகையில் தொகாடியாவுக்கு பார்வையாளர்களின் பாராட்டு கிடைத்துக் கொண்டிருந்தது.
சோசியல் நெட்வர்க் தளங்களில் பிரவீன் தொகாடியா பேச்சின் காட்சிகள் பரப்புரைச் செய்யப்பட்டதை தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நெல்லி(அஸ்ஸாம்), பாகல்பூர்(பீகார்), குஜராத் ஆகிய இடங்களில் இருந்து போலீஸை அப்புறப்படுத்தியதை தொடர்ந்து நடந்த முஸ்லிம் இனப்படுகொலையை தொகாடியா தனது உரையில் நினைவுகூர்ந்தான்.
“எங்களுடையது கோழைகளின் மதமல்ல. பவானி தேவியின் கரங்களில் எப்பொழுதும் ஆயுதங்கள் உண்டு” என்று தொகாடியா கூறுவது வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
டிசம்பர் 22-ஆம் தேதி அக்பருத்தீன் உவைஸி ஆந்திரபிரதேச மாநிலம் நிர்மல் நகரில் நடத்திய உரை உணர்ச்சியை தூண்டக்கூடியது என குற்றம் சாட்டி போலீஸ் அவரை கைது செய்தது. உவைஸி நடத்திய உரையில் ஜனவரி 2-ஆம் தேதி நிர்மல் நகர போலீஸ் சுயமாகவே வழக்கை பதிவுச் செய்தது. ஆனால், தோக்காவில் பிரவீன் தொகாடிய ஆற்றிய உரையில் தவறாக எதுவும் காணவில்லை என்று நந்தத் மாவட்ட போலீஸ் கூறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி வழங்கியிருந்ததாகவும் இன்ஸ்பெக்டர் ஸந்தீப் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.