Tuesday, 5 February 2013

எஸ்.சி.-எஸ்​.டி. பிரிவினரைவி​ட முஸ்லிம்களி​ன் நிலை மோசம்! – பிரிட்டன் பேராசிரியர்

Gordon Campbell
டெல்லி:இந்தியாவில் எஸ்.சி.-எஸ்​.டி. பிரிவினரைவி​ட முஸ்லிம்களி​ன் நிலை மோசமாக உள்ளது என்று பிரிட்டன் பேராசிரியர் கோர்டன் காம்ப்பெல் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவில் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகள்கூட முஸ்லிம்களுக்கு வழங்கப்படாததால், அவர்களின் நிலை இந்தியாவில் மோசமடைந்து காணப்படுகிறது. இந்தியாவில் சச்சார் குழு அளித்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு குறைந்தபட்சம் கல்வி மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் சலுகைகளும் அறிவிக்கப்பட வேண்டும்.” என்று இங்கிலாந்தில் லைசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் மறுமலர்ச்சி ஆய்வுத்துறையின் பேராசிரியரான கோர்டன் காம்ப்பெல்  அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.