Tuesday, 5 February 2013

ஈரானின் முதல் விண்வெளி பயணியாக மாற தயாராகும் அஹ்மத் நஜாத்!

Iran's President Mahmoud Ahmadinejad ready to go into space
டெஹ்ரான்:ஈரானின் முதல் விண்வெளி பயணியாக செல்ல தயார் என்று அந்நாட்டின் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார். விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது தொடர்பாக ஈரான் விஞ்ஞானிகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ள நிலையில் நஜாத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தலைநகரில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சாதனைகளை காண நஜாத் வருகை தந்தார். ஈரான் விஞ்ஞானிகளின் முதல் விண்வெளி பயணத்தில் பங்கேற்க தான் விரும்புவதாக நஜாத் கூறினார். இத்திட்டத்தின் பணியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளை பாராட்டுவதாகவும் நஜாத் தெரிவித்தார்.
மனிதனை விண்வெளிக்கு அனுப்புவதன் முன்னோடியாக குரங்கை கடந்த வாரம் ஈரான் விஞ்ஞானிகள் அனுப்பியிருந்தனர். ஐந்து வருடத்திற்குள் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப முடியும் என்பது ஈரானின் கணிப்பாகும். ஈரானின் விண்வெளித் திட்டம் குறித்தும் மேற்கத்திய நாடுகள் கவலைத் தெரிவித்துள்ளன

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.