Tuesday 11 June 2013

கோவையில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் ஸ்கூல் சலோ பிரச்சாரம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!


கோவை: சமூகத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை கொண்டு சேர்ப்பதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் நடத்தி வரும் ஸ்கூல் சலோ பிரச்சாரம் இவ்வாண்டு டெல்லியில் துவங்கியது. வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள டெல்லி செங்கோட்டையில், கல்வியின் முக்கியத்துவத்தையும், அனைத்து குழந்தைகளுக்குமான கல்வி கற்பதன் உரிமையையும் எடுத்தியம்பும் முழக்கங்களையும், அட்டைகளையும் ஏந்தி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற பேரணியின் மூலம் கடந்த மாதம் இந்நிகழ்ச்சி துவங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ் மாநில துவக்க விழா திண்டுக்கல் மாவட்டத்தில் கோலாகலமாக தொடங்கியது.

கோவையில் போத்தனூர், கருணாநிதி நகர் ஆகிய இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஸ்கூல் சலோ (பள்ளி செல்வோம்) என்ற கல்வி விழிப்புணர்வு பேரணி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. கோவை, போத்தனூர் ரோடு, டெக்சிட்டி கல்லூரி வளாகத்தில் வைத்து குறிச்சி பிரிவு பகுதி தலைவர் K.முஜிபுர்ரஹ்மான் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா வின் கோவை மாவட்ட தலைவர் K . ராஜாஉசேன் அவர்கள் தேசீய அளவில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா வின் சமுக மேம்பாட்டுத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் சமுக மேம்பாட்டு பணிகள் குறித்து விளக்கி கூறினார். இந்நிகழ்ச்சியில் SDPI கட்சின் கோவை மாவட்ட தலைவர் A .முஹம்மது முஸ்தபா, கோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் M பெருமாள்சாமி BE, கோவை மாநகராட்சி 82 வது வார்டு SDPI உறுப்பினர் A முஹம்மது சலீம் ,SDPI கட்சின் கிணத்துக்கடவு தொகுதி தலைவர் A முஹம்மது சுல்தான், கோவை மாநகராட்சி 95 வது வார்டு உறுப்பினர் S கெளரி சேவியர், சமுக மேம்பட்டுத்துறையின் மாவட்ட பொறுப்பாளர் S முஹம்மது ஜாபர் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரையுடன் கல்வி உபகரணங்கள் வழங்கினர்கள். குறிச்சி பிரிவு பகுதி செயலாளர் S முஜீபுர்ரஹ்மான் நன்றி கூறினார்.

கோவை, கருணாநிதி நகர், அலிஃப் லாம் மீம் மதரசா வளாகத்தில் வைத்து பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா வின் கோவை மாவட்ட தலைவர் K . ராஜாஉசேன் அவர்கள் தலைமையில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடக்கு பகுதி செயலாளர் அஜீசுல்லா வரவேற்புரை நிகழ்த்தினார். K . ராஜாஉசேன் அவர்கள் தேசீய அளவில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா வின் சமுக மேம்பாட்டுத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் சமுக மேம்பாட்டு பணிகள் குறித்து விளக்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் SDPI கட்சின் கோவை மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ், அலிஃப் லாம் மீம் மதரசா தலைவர் ஹாஜி காதர் பாஷா, மிஸ்பாஹுல் ஹுதா சுன்னத் ஜமாஅத் KK நகர் தலைவர் சுலைமான், 10 வது வார்டு காங்ரஸ் தலைவர் மனோகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வாழ்த்துரையுடன் கல்வி உபகரணங்கள் வழங்கினர்கள். KK நகர் பகுதி நௌசாத் நன்றி கூறினார்.

இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கல்வி சர்வே, விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பள்ளிக்கூடங்களில் பாதியில் படிப்பை நிறுத்தும் மாணவர்களை கண்டுபிடித்து அவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவது, பள்ளிக்கூட கிட் விநியோகித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஸ்கூல் சலோ பிரச்சாரம் மூலம் நடத்தி வருகிறது.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.