Thursday 11 April 2013

திருப்பூரில் இலங்கையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்



திருப்பூர் : இலங்கையில் ஆளும் சிங்கள பௌத்த அரசாங்கம் தமிழர்களை தொடர்ந்து முஸ்லீம்களை வேரறுக்க வேண்டும் எனும் நோக்கில் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கெதிராக பள்ளிவாசல் இடிப்பு, ஹலால் முத்திரை நீக்குதல், முஸ்லிம்களின் கலாச்சார உரிமைகளை மறுக்கும் நோக்கில் ஹிஜாபை தடை செய்தல், பர்தா மற்றும் தொப்பி அணிந்து வரும் முஸ்லீம்களை அச்சுறுத்துதல் என பல்வேறு அச்சுறுத்தும் வேலைகளை செய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இலங்கை கொழும்புவில் உள்ள பெபிலியானாவில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான Fashion Bug நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்து பௌத்தபிக்குகளும், பாசிஸ வெறியர்களும் நிறுவனத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததோடு, அங்கிருந்த ஊழியர்களையும் தாறுமாறாக தாக்கி படுகாயப்படுத்தியுள்ளனர்.

முஸ்லீம்களை துடைத்தெறிய வேண்டும் எனும் நோக்கில் தொடர்ச்சியாக பல்வேறு அநியாயங்களை செய்து வரும் பாசிஸ சிந்தனை கொண்ட பௌத்த பயங்கரவாதிகளையும், இன அழிப்பில் ஈடுபட்டுள்ள சிங்கள அரசாங்கத்தையும் வன்மையாக கண்டிக்கும் வகையிலும் , மத்திய அரசு உடனே தலையிட்டு முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதலை தடுத்து நிறுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி 01.04.2013 அன்று மாலை 5.௦௦ மணியளவில் திருப்பூர் மாநகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் M.Y.அப்பாஸ் கண்டன உரையாற்றினார். இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு இலங்கைக்கு எதிரான தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.